Wednesday, 14 September 2011

தேடுகிறேன் என்னை உன்னில்


அதிகாலை என் தொலைபேசி  சினுங்கி
என்  ஆசை கனவுகளை கலைபதற்கு 
சில நிமிடங்கள் முன்......
இமைகள் உறங்காமல் கனவோடு சண்டை இட்ட கணத்தில் 
கனவில் ஓவியமாய் விரிந்தது உன் முகம்



உன் முன்னே நான் 
உதடுகள் ஒட்டி
பேசவந்த வார்த்தைகளை துலைதவளாய்......


மௌனத்தில் கரைந்த அந்த நிமிடத்தில்
 என் உள்ளே
ஆயிரம் வார்த்தைகள் கவிதையாய் 
 ஒன்றும்  வெளியே வராமல்.....


பட்டாம்பூச்சியின் சிறகினை விட 
அதிகமாய் துடித்தன என் இமைகள் 
காலை சூரியனின் கதிர்களில் 
அதிகாலை பணியைவிட 
அதிகமாய் வியர்வை துளிகள்  என் முகத்தில் .....


கார்மேகத்தின் நடுவில் ஒளி வெள்ளமாய் தோன்றும் மின்னலை போல் 
உன் முகத்தில் தோன்றிய சிரிப்பு 
துடிக்க மறந்தது என் இதயம் .........


நலமா ....
என ஒற்றை சொல்லை கேட்டு சென்றாய் ...
என் மனதை உன்னோடு சுமந்து செல்வது அறியாமல் ....


நகரமறுத்த என் கால்கள் ...
பூமியோடு ஒபந்தம் செய்தபடி அங்கேயே  நிற்க..
யாரிடம் கூறுவேன்
 என் உயிர் நீ என்னும் செய்தியை ....

No comments:

Post a Comment