கடைசி பக்கம்
இல்லாதது தெரியாமல்
வேகமாய் படித்த
நாவல்
நான் படித்து
சென்ற போது மட்டும்
இரத்தான தேர்வுகள்
என் முறை
வரும்போது மட்டும்
தீர்ந்துபோன
டிக்கெட்கள்
நான் சரியாக சொல்லியும்
ஆசிரியர் காதில் விழாத
விடைகள்
இவை அனைத்தும் சுவாரசியம் தான்
வாழ்கையை அனுபவித்து வாழ்ந்தால்
No comments:
Post a Comment