Tuesday, 30 August 2011

சுவாரஸ்யமான வாழ்க்கை

கடைசி பக்கம் 
இல்லாதது தெரியாமல் 
வேகமாய் படித்த 
 நாவல்

நான் படித்து
சென்ற போது மட்டும் 
இரத்தான தேர்வுகள் 

என் முறை 
 வரும்போது மட்டும் 
தீர்ந்துபோன 
டிக்கெட்கள்

 நான் சரியாக சொல்லியும்
ஆசிரியர் காதில் விழாத 
விடைகள்

 இவை   அனைத்தும் சுவாரசியம் தான்
வாழ்கையை அனுபவித்து வாழ்ந்தால்